Friday, April 8, 2011

உலகக்கோப்பையும் தமிழக அரசியலும் (போட்டோ கமெண்ட்ஸ்)


அனல் தெறிக்கும் இத்தேர்தல் நேரத்தில், நான் கண்ட சில புகைப்படங்களும்,எனது கற்பனையும் ..........
தமிழக அரசியல்வாதிகள் இப்படியும் பேசுவார்கள்......நம்பமுடியாது.....
ஏனென்றால் நாம் எல்லோரும் இளிச்சவாயர்கள் தானே..(என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்)







இதில் ஒரு காமெடி என்னன்னா.....இன்னும் இந்த முன்னாள் நடிகை, தி.மு.க. கடந்த ஐந்து ஆண்டுகள் வெற்றி கரமாக ஊழலும் செய்து ஆட்சி நடத்தி,அடுத்த தேர்தல் வந்த பின்னும் "மைனாரிட்டி தி.மு.க.அரசு ", "மைனாரிட்டி தி.மு.க.அரசு" என்று ஒப்பாரி வைப்பது....நம்மால் இந்த மாதிரி ஊழல் செய்ய முடிய வில்லையே என்ற வயித்தெரிச்சலில் புலம்புவது....எல்லாம் ஒரே சாக்கடையில் உருளும் ஜந்துக்கள் தானே....என்ன சொல்றீங்க....












Tuesday, April 5, 2011

ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்துள்ளார் வடிவேலு : ஆர்.வி.உதயக்குமார்


நாகர்கோவிலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆர்.வி.உதயக்குமார் பிரசாரம் மேற்கொண்டு பேசினார். நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து பார்வதிபுரத்தில் அவர் பேசியதாவது: விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். எதையும் ஓப்பனாக பேசுவார். 

அவரை வைத்து நான் சின்னக்கவுண்டர் படம் இயக்கும்போது நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர்தான் வடிவேலு. அந்த படத்தில் விஜயகாந்துக்கு குடை பிடிப்பவராக வடிவேலு நடித்திருப்பார்.விஜயகாந்திடம், பாவம் உங்கள் ஊர் பையன்தான் அண்ணே என்று, நான்தான் அறிமுகம் செய்து வைத்தேன். விஜயகாந்த் அவரை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டார்.

ஆனால் ஏற்றிவிட்ட ஏணியை வடிவேலு எட்டி உதைத்துள்ளார். தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசும் அவர் வேட்பாளரை மதிப்பதே கிடையாது.திரை உலகம் இன்று ஒரே குடும்பத்தை நம்பி உள்ளது. இவர்களுக்கு ஜெயலலிதா மட்டும்தான் விடுதலை வாங்கித்தர முடியும் என்றார் உதயக்குமார்.

Friday, March 18, 2011

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது.....

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது..அப்புக்குட்டியை பாராட்டிய இசைஞானி
அழகர்சாமியின் குதிரை பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கும் வந்திருந்து அனைவருக்கும் இன்ப 
அதிர்ச்சி கொடுத்தார். 
இந்த படத்தின் சில ரீல்களுக்கு பின்னணி இசையமைத்துவிட்டு நேராக அங்கு வந்த ராஜா உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தார். உங்க செல்போன்களை அணைச்சு வச்சுட்டு இந்த படத்தின் பின்னணி இசையை கொஞ்சம் கேளுங்க. நீங்க ஒரு சொட்டு கண்ணீர் விடலைன்னா நான் இசையமைக்கிறதையே நிறுத்திடுறேன் என்றார் மிக தீர்க்கமாக!

அப்புறம் அவர் பேசியதெல்லாம் தத்துவம் நம்பர் ஆயிரமாயிரம்! மனுஷனோட எண்ணம்தான் இந்த மண்ணுல விதைக்கப்படுது. இன்னைக்கு ஜப்பான்ல இப்படி ஆகியிருக்குன்னா அதுக்கு காரணம் நம்ம எண்ணம்தான். அது து£ய்மையா இருக்கணும். கடவுள் நம்ம மீது கோபப்பட வேண்டாம். ஒரு பெருமூச்சு விட்டால் போதும். நாமெல்லாம் இல்லை. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றவர், சட்டென்று படத்தை பற்றி பேச ஆரம்பித்தார்.
அப்புக்குட்டி இந்த படத்தில் அற்புதமா நடிச்சிருக்கார். அதுக்காக அவர் தன்னை சூப்பர் ஸ்டார்னு நினைச்சுக்க கூடாது. நீ நினைச்சாலும் சூப்பர் ஸ்டாரா ஆக முடியாது. அதே மாதிரி இந்த படத்தில் அப்புக்குட்டி நடிச்சிருக்கிற கேரக்டர்ல அந்த சூப்பர் ஸ்டாரால் கூட நடிக்க முடியாது. இதை புரிஞ்சுக்கணும். கதை சொல்ல வர்ற இயக்குனர்கள்தான் முதலாளி. பல வருஷமா போராடி தன்னுடைய அனுபவங்களையெல்லாம் கதையா வடிச்சு கொண்டு வர்றவங்க அவங்க. அவங்ககிட்ட போய், என் இமேஜூக்கு இந்த கேரக்டர் சரியா வருமான்னு கேட்க கூடாது என்று ராஜா பேச பேச இப்படியெல்லாம் அவர் பேசியதில்லையே என்ற அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.

Tuesday, March 15, 2011

ஜப்பானில் 3வது அணு உலை வெடித்தது: 4ம் அணு உலை தீ பிடித்து எரிகிறது: கதிர்வீச்சு அதிகரிப்பு!

ஜப்பானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்குதலில் சுமார் 15 ஆயிரம் பேர் பலியானார்கள். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள மியாகி மாநிலம் கடும் பேரழிவை சந்தித்துள்ளது. அங்குள்ள கடலோரத்தில் இருந்து இது வரை 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பூகம்பம், சுனாமி அலைகள் பாதிப்பால் ஜப்பான் வடபகுதி மக்கள் உறவினர் களையும், வீடுகளையும் இழந்து தவித்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் வகையில் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகள் எமன் போல் மாறி வெடிக்கத் தொடங்கி உள்ளன.மின்சாரம் தயாரிக்கும் அணு உலையில் செயல்பாடு நிற்குமானால், குளிர்ந்த நீர் பாய்ச்சி, அணு உலைகள் குளிர்விக்கப்பட வேண்டும். அதில் தவறு நடந்தால் கதிர் வீச்சு எற்பட்டுவிடும். ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள அணு உலைகள் சுனாமி பேரலைகள் தாக்கியதும் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன.ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அணு உலைகளை குளிர்விக்கும் ஜெனரேட்டர்கள் மற்றும் கருவிகள் பூகம்பத்தால் நொறுங்கி செயல்படாத தால் சிக்கல் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து கடல் தண்ணீரை அணு உலைகளில் செலுத்தி குளிர்விக்கும் முயற்சி நடந்து வருகிறது.   குளிர்விக்கும் நடவடிக்கைகளில் வெற்றி கிடைக்காததால் கடந்த சனிக் கிழமை ஒரு அணு உலை வெடித்தது.நேற்று புகுஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள 3-வது பிரிவு அணு உலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த இரு உலைகளில் இருந்தும் கதிர்வீச்சு வெளியானபடி உள்ளது. அது மேலும் பரவுவதை தடுக்க தீவிர முயற்சிகளில் ஜப்பான் நாட்டு அணுசக்தி நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள டைசி யூனிட் 2-வது பிரிவு அணு உலை இன்று அதிகாலை இந்திய நேரப்படி 6.10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த அணு உலை எந்நேரத்திலும் வெடிக்கலாம் என்று நேற்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.2-வது பிரிவு அணு உலை வெடித்து சிதறிய சிறிது நேரத்தில் அந்த பிரிவில் இருந்த ஹைட்ரஜன் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. இதனால் 2-வது பிரிவு அணு உலை கூரை, சுற்றுச்சுவர்கள் நொறுங்கின. அணு உலையும், ஹைட்ரஜன் சிலிண்டரும் அடுத்தடுத்து வெடித்த சத்தம் பல மைல் தொலைவுக்கு கேட்டது.2-வது பிரிவு அணு உலைப் பகுதியில் இருந்த சுமார் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்காக சென்றிருந்த ராணுவ வீரர்களும் கதிர் வீச்சில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சோதனை மேல் சோதனையாக 2-ம் எண் அணு உலை வெடித்ததில் இருந்து கிளம்பிய அதிக அளவு வெப்பம் மற்ற அணு உலை பிரிவுகளில் தாக்கியது.இதன் காரணமாக 4-வது பிரிவு அணு உலையில் தீ பிடித்தது. எனவே 4-வது பிரிவு அணு உலை இன்று எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. புகுஷிமா அணு மின் நிலையத்தில் மொத் தம் 6 அணு உலை பிரிவுகள் உள்ளன. இவற்றில் 4 பிரிவுகள் பாதுகாப்பு இல்லாததாக மாறி விட்டன.மற்ற 2 அணு உலைகள் வெடிக்காமல் இருக்க ஜப்பான் நாட்டு நிபுணர்கள் போராடிக் கொண்டிருக் கின்றனர். அனால் அந்த அணு உலைகளும் வெடித்து விடும் என்று தெரிகிறது. இந்த 6 அணு உலைகளும் ஜப்பான் வடகிழக்கு பகுதியின் மின் தேவையில் சுமார் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.முதல் 2 அணு உலைகள் வெடித்த போது கதிர்வீச்சு அபாயம் அதிகம் இல்லை என்று ஜப்பான் அரசு கூறி வந்தது. ஆனால் இன்று 3-வதாக மேலும் ஒரு அணு உலை வெடித்து இருப்பதன் மூலம் கதிர்வீச்சு அளவு பல மடங்கு அதிகரித்து விட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பான் பிரதமர் நயடோகான் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் அவர் 3 அணு உலைகளில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சு அதிகரித்து வருகிறது. இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புகு ஷிமா அணு உலை பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவர் கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.அரசின் எச்சரிக்கை ஜப்பான் மக்களிடம் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து புகுஷிமா மின்நிலைய அணு உலைகள் தென்மேற்கு திசையில் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. புகுஷிமா அணு உலை கதிர்வீச்சு டோக்கியோ வரை வந்து விடுமோ என்று மக்கள் பயந்தபடி உள்ளனர்.பூகம்ப பாதிப்புகளை சமா ளித்து விடலாம். கதிர்வீச்சை எப்படி எதிர் கொள்வது என்று ஜப்பான் மக்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.   அணு உலைகளில் இருந்தும் கதிர்வீச்சு வெளியானபடி உள்ளது. அணு உலை கசிவைத் தடுத்து விட்டாலும் கூட அணு மூலப் பொருளில் இருந்து வெளி யாகும் கதிர்வீச்சுகளை நிபுணர்களால் தடுக்க இயல வில்லை.மூலப்பொருளில் இருந்து வெளியாகும் காமா கதிர்கள் மிக, மிக பயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு அபாயம் தொடர்ந்து நீடிப்பதால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று சுமார் 1.80 லட்சம் பேர் தொலை தூர பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.   ஜப்பானின் வட கிழக்கு பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. 15 லட்சம் பேர் குடிநீர் தட்டுப்பட்டால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கும் சரியான உணவு, உடைகள் கிடைக்க வில்லை.வடகிழக்கு பகுதி நகரங்களில் சுமார் 6 லட்சம் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சேத மதிப்பு கணக்கிட முடியாதபடி உள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் பல ஊர்களுக்கு மீட்புக் குழு வினர் செல்ல முடியாத படி உள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் பல ஊர்களுக்கு மீட்புக் குழுவினர் செல்ல முடியாத படி சாலைகள் நொறுங்கியுள்ளன. இதனால் உலகின் பல நாட்டு மீட்பு குழுக்களும் வான் வழியாகவே மீட்பு பணிகளை செய்து வருகின்றன.

துபாய் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு : இந்தியர்கள் 11பேருக்கு ஆயுள், ஒருவருக்கு மரண தண்டனை

அரபு நாடான துபாயில், சக இந்தியரைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் ஒரு இந்தியருக்கு மரண தண்டனையும், 11 இந்தியர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு குடிபோதையில் ஏற்பட்ட தகராறி்ல் சக இந்தியரைக் கொலை செய்ததற்காக, பஞ்சாபைச் சேர்ந்த மேஜர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 இந்தியர்களுக்கும், 1 பாகிஸ்தானியருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. சுகிஜித் சிங், ராகேஷ் குமார், சுக்விந்தர் சிங், சுர்ஜித் சிங், மஞ்சித் சிங், ராஷ்பல் சிங், பல்விந்தர் சிங், அமர்ஜித் சிங், சுரிந்தர் சிங், பல்விந்தர் சிங், சரப்ஜித் சிங் மற்றும் பாகிஸ்தானியர் முஹமது ரபாத் ஆகியோர் தான் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

இந்த வழக்கு துபாயில் உள்ள ஜெபெல் அலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.  இவ்வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி நிறைவடைந்தது. தீர்ப்பு மட்டும் ஜனவரி மாதம் 3ம் தேதி வழங்குவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு முதலில் பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 14ம் தேதி அளிக்கப்பட்டது.

சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பல் சிறை பிடிப்பு : இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கை

சோமாலியா கடற்கொள்ளையர்களின் கப்பல் ஒன்றை வழிமறித்து சிறைபிடித்த இந்திய கடற்படையினர், அதில் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 13 சிப்பந்திகளை மீட்டுள்ளனர்.அத்துடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் 61 பேரையும், இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.மேற்கு கடலோரப் பகுதியிலிருந்து 600 கடல் மைல் தொலைவில், இந்திய கடற்படையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.பிடிபட்டுள்ள சோமாலிய கொள்ளையர்களின் கப்பல், கொள்ளையர்களின் தாய் கப்பல் என்று கூறப்படுகிறது.பிடிபட்ட இந்த கப்பல் மும்பை கொண்டு வரப்படுவதாகவும், இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tuesday, March 1, 2011

ரஹ்மானுக்கு விருதில்லை

கடந்த முறை 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது.
விழாவில் அதிக அளவிலான விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன், தி சோஷியல் நெட்வொர்க் ஆகிய படங்கள் பெற்றன. இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது காலின் பிர்த் என்பவருக்கு தி கிங்ஸ் ஸ்பீச் என்ற படத்திற்காகவும், சிறந்த நடிகை விருது நதாலி போர்ட்மேனுக்கு பிளாக் ஸ்வான் படத்திற்காகவும் கிடைத்தது. தி கிங்ஸ் ஸ்பீச் படம் சிறந்த இசையமைப்பளருக்கான விருதையும் பெற்றது.
இதுதவிர சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்), சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்குனர் என மொத்தம் 5 விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச் படம் தட்டிச் சென்றது.
தி சோஷியல் நெட்வொர்க் படம் இசை (ஒரிஜினல் ஸ்கோர்), சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை (தழுவல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை வென்றது.
இன்செப்ஷன் படம் விசுவல் எபெக்ட், ஒலிக்கலவை, ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. சிறந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் டென்மார்க் படமான இன் எ பெட்டர் வேர்ல்ட் படம் ஆஸ்கார் விருது பெற்றது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்: மே 13ல் முடிவுகள் :

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.
தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேதி தேர்தல் நடக்கவுள்ளது.அதே போல கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும்.தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றார்.தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 27, 2011

7ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்!:ல்போனில் படம் எடுத்து மிரட்டியவர் கைது!

சின்னசேலம் அருகே உள்ள வானக்கொட்டா யை சேர்ந்த பெண் (12), அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் (35) என்பவர்

Wednesday, February 23, 2011

ஆரோக்கியம்: கோடையை சமாளிக்க சில கு‌றி‌‌ப்புக‌ள்

கோடை காலம் இது. உடல் உஷ்ணமும் வியர்வை நாற்றமும் தவிக்க முடியாத ஒன்றாகும்.

இது போன்ற தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க இதோ சில எளிய குறிப்புகள்:

உடலு‌க்கு ஏ‌ற்ற தரமான வாசனை சோப்புகளைக் கொண்டு தினமும் 2 முறை நீராடவும்.

ஒரே ஆடையை இர‌ண்டு நா‌ட்களு‌க்கு பய‌ன்படு‌த்துவதை த‌வி‌ர்‌க்கவு‌ம்.

உடலை வாசனையாக வை‌த்‌திரு‌க்கு‌ம் ‌திரவ‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.

பருத்தி ஆடைகளையே அணிவது நல்லது. வீட்டில் இருக்கும்போது எளிய மெல்லிய ஆடைகளை அணியலாம்.

திரவ உணவுகளை அ‌திக‌ம் உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டு‌ம். குளிர்ச்சியான இளநீர், நுங்கு, பழ வகைகளை உண்ண வேண்டும்.

வெ‌யி‌‌லி‌ல் வெ‌ளியே செ‌ன்றா‌ல் குடை ‌நி‌ச்சய‌ம் கொ‌ண்டு போக வே‌ண்டு‌ம்

Saturday, January 29, 2011

மெயில் படிங்க...காச புடிங்க





இந்த Website ல்  இணைந்தாலே நம் கணக்கில் ரூ.100 சேர்ந்து விடுகிறது. இந்த தளத்தில் நாம் செய்ய வேண்டியது Mail ஐ கிளிக் செய்து படிக்க வேண்டும் அவ்வளவு தான். இந்த தளத்தில் இணைந்தவுடன் நமக்கு இந்த தளத்திலேயே ஒரு இன்பாக்ஸ் தந்து விடுகிறார்கள். இதில் வரும் மெயில்களை திறந்து அதில் உள்ள விளம்பரங்களையோ, சுட்டியையோ கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு மெயிலுக்கும் நமக்கு பணம் தருகிறார்கள்.
இதில் இணைய  கிளிக் செய்யுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினாலும் உங்களுக்கு பணம் தருகிறார்கள்.
இந்த link ஐ கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள். .







உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?


எனக்கு மின்னஞ்சலில் வந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் 
உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள்சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அதுகிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.

இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால்தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாகசெழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம். 

ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவுசுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவேநம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....

1.
சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?

நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

2. புளோரைடு அளவுகோல் பற்றியும்அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?
குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும்பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?

குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்றுசூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும்நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?

நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போதுமஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?

இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.

7. 
போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?

தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும்உப்பும் இருக்கும் போது நீரானதுஉப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
நீரை கொதிக்க வைத்துகுளிர வைத்துவடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு கிராம் என்ற அளவில்)
தொழிற்சாலை கழிவுகள்வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்)கால்நடை கழிவுகள்நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.

கைப்பம்புகள்குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய்போர்வெல்லின் அடியில் குளித்தல்மாடுகளை கழுவுதல்துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணிசென்னை-600113
போன்:044-22541373 

Friday, January 28, 2011

பஞ்சாயத்து தலைவரை ஓட ஓட விரட்டிய காட்டுயானை!

களக்காடு காட்டுப்பகுதியில் பைக்கில் சென்ற பஞ்சாயத்து தலைவரை, காட்டுயானை விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேரன்மகாதேவி, களக்காடு இடையிலேயான‌ காட்டுப் பகுதியில் கடந்த 1 மாத காலமாக காட்டு யானைகள் அவ்வழியே செல்லும் வாகனங்களை மறித்தும், விளை நிலங்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் வனத்துறையினர், யானைகளை அவ்வப்போது வெடி வெடித்து காட்டுக்குள் விரட்டி வருகின்றனர்.இந்நிலையில் காலையில் 12 காட்டு யானைகள் ரோடுகளில் நடமாட தொடங்கின. அவ்வழியே பள்ளிக்கு நடந்து சென்ற சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அலறி அடித்து ஓடினர். அவ்வழியே பைக்கில் சென்ற உலகன்குளம் பஞ்சாய‌த்து தலைவர் பீட்டரை யானை துரத்த தொடங்கியது. இதனால் பதட்டம் அடைந்த அவர், பைக்கை போட்டுவிட்டு ஓடத் துவங்கினார். இதனால் ஆத்திரமடைந்த யானை, அவருடைய இரண்டு சக்கர வாகனத்தை யானை மிதித்து சேதப்படுத்தியது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சத்தியநாதன், வெள்ளத்துரை சாமுவேல் மற்றும் சேரன்மகாதேவி எம்.எல்.ஏ., வேல்துரை ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர்,எம்.எல்.ஏ.,வேல்துரை கூறுகையில், யானைகள் ரோட்டு பகுதிக்கு வராமல் இருக்க, விரைவில் மின்வேலி அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்

மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்! தூத்துக்குடியில் பரபரப்பு!!

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் மீனவர்கள் கறுப்புக்கொடியேற்றி போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.
இலங்கைக் கடற்படை கடந்த 12ம் தேதி மீனவர் பாண்டியன் என்பவரை சுட்டுக் கொன்றது. இந்நிலையில் மீண்டும் ஜெயக்குமார் என்ற மீனவரை மிக கொடூரமாக கடலில் தள்ளி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட‌ மீனவர்கள் குடியரசு தினத்தன்று தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.இதன்படி தூத்துக்குடி திரேஸ்புரம், புதிய துறைமுகம் மீனவர் காலனி, தருவைகுளம், வேம்பார், பெரியதாழை, மணப்பாடு, அமலிநகர், புன்னக்காயல் உட்பட மீனவர் கிராமங்களில் உள்ள வீடுகளிலும், படகுகளிலும் கறுப்புக் கொடியேற்றியுள்ளனர்.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தின் நுழைவு வாயிலில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. வேம்பார் பகுதியில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடிகளை சூரங்குடி போலீசார் அகற்றினர். இதனால் மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Thursday, January 27, 2011

மெயில் படிச்சா காசு....இணைந்தாலே Rs.100





இந்த Website ல்  இணைந்தாலே நம் கணக்கில் ரூ.100 சேர்ந்து விடுகிறது. இந்த தளத்தில் நாம் செய்ய வேண்டியது Mail ஐ கிளிக் செய்து படிக்க வேண்டும் அவ்வளவு தான். இந்த தளத்தில் இணைந்தவுடன் நமக்கு இந்த தளத்திலேயே ஒரு இன்பாக்ஸ் தந்து விடுகிறார்கள். இதில் வரும் மெயில்களை திறந்து அதில் உள்ள விளம்பரங்களையோ, சுட்டியையோ கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு மெயிலுக்கும் நமக்கு பணம் தருகிறார்கள்.
இதில் இணைய  கிளிக் செய்யுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினாலும் உங்களுக்கு பணம் தருகிறார்கள்.
இந்த link ஐ கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள். .