தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் மீனவர்கள் கறுப்புக்கொடியேற்றி போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.
இலங்கைக் கடற்படை கடந்த 12ம் தேதி மீனவர் பாண்டியன் என்பவரை சுட்டுக் கொன்றது. இந்நிலையில் மீண்டும் ஜெயக்குமார் என்ற மீனவரை மிக கொடூரமாக கடலில் தள்ளி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குடியரசு தினத்தன்று தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.இதன்படி தூத்துக்குடி திரேஸ்புரம், புதிய துறைமுகம் மீனவர் காலனி, தருவைகுளம், வேம்பார், பெரியதாழை, மணப்பாடு, அமலிநகர், புன்னக்காயல் உட்பட மீனவர் கிராமங்களில் உள்ள வீடுகளிலும், படகுகளிலும் கறுப்புக் கொடியேற்றியுள்ளனர்.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தின் நுழைவு வாயிலில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. வேம்பார் பகுதியில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடிகளை சூரங்குடி போலீசார் அகற்றினர். இதனால் மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

No comments:
Post a Comment