Friday, January 28, 2011

பஞ்சாயத்து தலைவரை ஓட ஓட விரட்டிய காட்டுயானை!

களக்காடு காட்டுப்பகுதியில் பைக்கில் சென்ற பஞ்சாயத்து தலைவரை, காட்டுயானை விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேரன்மகாதேவி, களக்காடு இடையிலேயான‌ காட்டுப் பகுதியில் கடந்த 1 மாத காலமாக காட்டு யானைகள் அவ்வழியே செல்லும் வாகனங்களை மறித்தும், விளை நிலங்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் வனத்துறையினர், யானைகளை அவ்வப்போது வெடி வெடித்து காட்டுக்குள் விரட்டி வருகின்றனர்.இந்நிலையில் காலையில் 12 காட்டு யானைகள் ரோடுகளில் நடமாட தொடங்கின. அவ்வழியே பள்ளிக்கு நடந்து சென்ற சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அலறி அடித்து ஓடினர். அவ்வழியே பைக்கில் சென்ற உலகன்குளம் பஞ்சாய‌த்து தலைவர் பீட்டரை யானை துரத்த தொடங்கியது. இதனால் பதட்டம் அடைந்த அவர், பைக்கை போட்டுவிட்டு ஓடத் துவங்கினார். இதனால் ஆத்திரமடைந்த யானை, அவருடைய இரண்டு சக்கர வாகனத்தை யானை மிதித்து சேதப்படுத்தியது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சத்தியநாதன், வெள்ளத்துரை சாமுவேல் மற்றும் சேரன்மகாதேவி எம்.எல்.ஏ., வேல்துரை ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர்,எம்.எல்.ஏ.,வேல்துரை கூறுகையில், யானைகள் ரோட்டு பகுதிக்கு வராமல் இருக்க, விரைவில் மின்வேலி அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment