Sunday, February 27, 2011

7ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்!:ல்போனில் படம் எடுத்து மிரட்டியவர் கைது!

சின்னசேலம் அருகே உள்ள வானக்கொட்டா யை சேர்ந்த பெண் (12), அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் (35) என்பவர்
மாணவியை பலாத்காரம் செய்ததோடு செல்போனிலும் படம் பிடித்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்வதாகவும் மாணவியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன மாணவி பெற்றோரிடம் கூறாமல் மறைத்து விட்டார்.இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது பெற்றோரிடம் மாணவி, குமார் தன்னை பலாத்காரம் செய்ததை கூறி இருக்கிறார்.

இதை தொடர்ந்து மாணவியின் தந்தை சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். விசாரணையின் போது குமார் ஏற்கனவே 40 பெண்களை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளதும், பல பெண்களை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து சிடி போட்டு தனது நண்பர்களிடம் காண்பிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இவரது செயலுக்கு இவருடைய சின்னம்மா ராதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. ராதாவை கைது செய்த போலீசார் குமாரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment