Monday, October 18, 2010

பத்த வச்சிட்டீயே பரட்டை-ரஜினி மீது ஆவேசப்படும் தலைவர்

 இந்த விஷயம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.'பத்த வச்சிட்டீயே பரட்டை'ன்னு புலம்பினாலும் தப்பில்லை. மும்பைக்கு போன ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. "அவர் எனக்கு கடவுள் போன்றவர்" என்றொரு முத்தை உதிர்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினியின் இனப்பற்று குறித்து மீண்டும் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது உணர்வாளர்கள் வட்டாரம்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் ரஜினியின் இந்த பேச்சு குறித்து ஆவேசப்பட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது-
பால்தாக்கரே தாராவியில் தமிழர்களை விரட்டியது இருக்கட்டும். அவரால் தமிழ்சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ரஜினிக்கு தெரியுமா? 1969 ல் பி.எஸ்.வீரப்பா தமிழில் எடுத்த ஆலயமணி படத்தை இந்தியில் திலீப்குமாரை வைத்தும் எடுத்தார். அந்த படத்தை திரையிடுவதற்கு பால்தாக்ரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், வாசன், நாகிரெட்டி ஆகியோர் மும்பை சென்று எப்படியாவது வீரப்பாவை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினர். அப்போது தமிழ்நாட்டில் இந்தி படத்தை திரையிட்டால்தான் வீரப்பாவின் படம் மஹாராஷ்டிராவில் வெளியிடப்படும் என்று அவர்களை மிரட்டினார் தாக்கரே.
தனது படம் ஒடவேண்டும் என்பதற்காக என்ற சுயநலத்திற்காக பால்தாக்கரேவை கடவுள் என்று சொன்ன ரஜினி, இலங்கையில் படம் ஓட வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை 'மகா கடவுள்' என்று சொல்வாரா என்று ஆவேசப்படுகிறார் ஜனார்த்தனன்.



குலசேகரன்பட்டினம் தசரா விழா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலம்!


குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையட்டி நேற்றுநள்ளிரவு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷம் விண்ணதிர மகிசாசூரசம்ஹாரம் விழா நடந்தது. இரவு முதல் விடிய விடிய தசரா குழுவினர் கையில் தீசட்டி ஏந்தி வழிப்பட்டனர். 


இந்தியாவில் மைசூருக்கு நிகராக, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்  கோவிலில் தசரா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதையட்டி விரதம் கடைப்பிடித்து வரும் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டினர். 

விழா நாட்களில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் துர்க்கை, விசுவகர்மேசுவரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிசாசூரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் முத்தாரம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 10-ம் நாளான (தசரா) நேற்று நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். நகரம் விழாக் கோலத்துடன் காணப்பட்டது. வேடம் அணிந்த பக்தர்களின் ஆட்டம், கொண்டாட்டத்துடன் ஊரே குதூகலமாக இருந்தது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், காலை முதல் கோவிலில் குவிந்த வண்ணமாக இருந்தனர். சுற்றுவட்டாரமான திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை மற்றும் கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் குவிந்தனர். வீதியெங்கும் பக்தர்கள் வந்த கார், வேன், வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் பை-பாஸ் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து கோவிலை வந்தடைந்தனர்.

காப்பு கட்டியது முதல் ஊர், ஊராக வேடம் அணிந்து சென்று காணிக்கை வசூலித்த பக்தர்கள் கோவிலில், காணிக்கை தொகையை சேர்த்தார்கள். காலை முதல் நள்ளிரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தவாறு இருந்தன. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அனைவரும் சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரைக்கு திரண்டு சென்றனர். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக சூரசம்ஹாரத்துக்கான சூலத்துக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். காளி வேடம் அணிந்த பக்தர்கள் புடை சூழ கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்து அம்பாள் சூரசம்ஹாரத்துக்கு வரும் அழகை காண, அலைகடலென லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து, சூரனை வதம் செய்ய முத்தாரம்மன் வந்தார். இதைப் பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் அம்மனுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். சூலத்தை எய்து வரமுனி என்ற சூரனின் தலையை ‘மகிசாசூரமர்த்தினி‘ வீழ்த்தினார். அப்போது பக்தர்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் வெற்றி கோஷங்கள் எழுப்பினர். வாண வேடிக்கைகள், அதிர் வேட்டுகள முழங்கின. 

பின்னர் கடற்கரை மேடையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 2 மணி அளவில் மீண்டும் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்பாளுக்கு அங்கும் பூஜைகள், பரிவாரங்கள் நடந்தன. காலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதையட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் அம்மன் தேருக்கு எழுந்தருளிய வைபவம் நடந்தது. தேர் நிலையத்துக்கு வந்ததும் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளினார். தசரா விழாவின் சிகர நாள் நேற்று என்பதால் குலசேகரன்பட்டினம் வீதியெங்கும் தசரா குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 

சுமார் 350-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கரகாட்டம், நையாண்டி மேளம் மற்றும் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்று மாலை தொடங்கி விடிய, விடிய தசரா குழுவினரின் நிகழ்ச்சிகளை, பக்தர்கள் ரசித்துப் பார்த்தனர். 11-ம் நாள் விழாவான இன்று (திங்கட்கிழமை) காலையில் முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருகிறார். பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு அம்பாள் கோவில் வந்து சேரும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு பக்தர்கள் காப்பு களைதல் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கின்றன. நாளை (12-ம் நாள் விழா) காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜை நடக்கிறது





Sunday, October 17, 2010

அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் நோட்டீஸ்-தமிழகத்தில் பரபரப்பு!


மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகர்களில் விநியோகிக்கப்படும் நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தமிழகம் என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது...

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?. நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்? அவர் சிரித்தபடி சொன்னார், என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!

என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?

மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். 

தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை யார் விநியோகிப்பது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த மர்ம நோட்டீஸால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

குருதி கொடையாளர்(Blood Donors) தேவையா ?

நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், விபத்தில் சிக்கிக் கொண்டு உடனடி சிகிச்சை கொள்ள துடிப்பவர்கள் அனைவருக்கும் இரத்தம் ஓர் உடனடித் தேவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் உதவ தன்னார்வத்துடன் பல தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அவசர காலத்தில் இவர்கள் எங்குள்ளனர் என்று தெரிவதில்லை. இந்த தன்னார்வலர்களின் தகவல்களைக் கொண்டுள்ள இலவச தகவல் மையங்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றைப் பெற்று, இவர்களைக் கண்டறிந்து, இரத்தம் தேவைப்படும் இடத்திற்கு இவர்கள் வருவதும் கால தாமதம் ஏற்படுத்தும் ஒரு செயலாகிறது.
இதனைத் தடுக்கவே www.friendstosupport.org என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் சென்றால் இங்கு இரத்த வகை வாரியாக, தன்னார்வலர்களின் முகவரி கிடைக்கிறது. எந்த இடத்திற்கு இவர்கள் வர வேண்டும் எனக் குறிப்பிட்டால், உடனே அந்த இடத்திற்கு அருகே உள்ளவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நாம் நேரடியாகவே இரத்தக் கொடையாளிகளுடன் பேசி அவர்களை வரவழைக்கலாம்.


அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்கள் இயங்கவில்லை என்றால், உடனே இந்த தளத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்,. அவர்கள் சார்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு சரியான தொலைபேசி எண்களைப் பெற்று, தளத்தில் அப்டேட் செய்கின்றனர். இந்த தளத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு சேவை செய்திடலாமே!





Saturday, October 16, 2010

வை‌ரமுத்‌து வரி‌களை‌ பா‌டி‌ய இளை‌யரா‌ஜா‌!




அஜி‌த்‌, தி‌ரி‌ஷா‌ நடி‌க்‌க உள்‌ள‌ மங்‌கா‌த்‌தா‌ படத்‌தை‌ வெ‌ங்‌கட்‌ பி‌ரபு‌ இயக்‌க உள்‌ளா‌ர்‌. வருகி‌ற நா‌ன்‌கா‌ம்‌ தே‌தி‌ முதல்‌ கி‌ழக்‌கு கடற்‌கரை‌ சா‌லை‌யி‌ல்‌ உள்‌ள ஒரு வீ‌ட்‌டி‌ல்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ தொ‌டங்‌குகி‌றது. இதற்‌கா‌க அந்‌த வீ‌டு செ‌ட்‌ வே‌லை‌கள்‌ நடந்‌து வருகி‌றது.
இதன்‌ நடுவே‌ இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு ஒரு பா‌டல்‌ பதி‌வா‌னதா‌க ஒரு செ‌ய்‌தி‌ கசி‌ந்‌துள்‌ளது. அது என்‌னவெ‌ன்‌றா‌ல்‌, தி‌ரை‌ இசை‌யி‌ல்‌ வல்‌லவர்‌களா‌ன இளை‌யரா‌ஜா‌, கவி‌ஞர்‌ வை‌ரமுத்‌து இருவரை‌யு‌ம்‌ இணை‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌று வி‌ரும்‌பி‌ய இயக்‌குநர்‌, அதை‌ இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ யு‌வன்‌சங்‌கர்‌ரா‌ஜா‌வி‌டம்‌ கூறி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. வை‌ரமுத்‌து எழுதி‌ய ஒரு பா‌டலை‌ நீ‌ங்‌கள்‌ பா‌ட வே‌ண்‌டும்‌ என்‌று தந்‌தை‌ இளை‌யரா‌ஜாவி‌டம்‌ யு‌வன்‌ கூற, அதற்‌கு மறுப்‌பே‌தும்‌ சொ‌ல்‌லா‌மல்‌ இளை‌யரா‌ஜா‌ பா‌டி‌யதா‌க அந்‌த தகவல்‌ தெ‌ரி‌வி‌க்‌கி‌றது.
எது எப்‌படி‌யோ‌, கூட்‌டணி‌ ஒன்‌னு சே‌ர்‌ந்‌தா‌ல்‌ மக்‌களுக்‌கு கொ‌ண்‌டா‌ட்‌டம்‌தா‌ன்‌


Sunday, October 10, 2010

எந்திரன் படம்-தற்கொலைக்கு முயன்ற ரஜினி ரசிகர்

கோவை: ரஜினிகாந்த் [^] நடித்துள்ள எந்திரன் படத்தைப் பார்க்க மனைவி வர மறுத்ததால் மனம் உடைந்த ரஜினி ரசிகர் தற்கொலைக்கு முன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (25). இவர் மனைவி பிரீதா (20). இருவரும் காதலித்து கடந்த மே மாதம் திருமணம் [^]செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர்.

தீவிர ரஜினி ரசிகரான வினோத்குமார், எந்திரன் படத்தை பார்க்க ஆவலாக இருந்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மனைவியிடம் சென்று "தலைவர் ரஜினியின் எந்திரன் படம் ரொம்ப பிரமாண்டமாக இருக்கிறதாம். ரஜினி சூப்பரா நடிச்சிருக்காராம். படம் பார்த்தவங்க எல்லாரும் பெருமையா சொல்றாங்க. நாமும் படத்துக்கு போகலாம்", என அழைத்துள்ளார்.

"எக்கச்சக்க கூட்டமாக இருக்கிறது, இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் போகலாம்" என்று கூறி தடுத்துள்ளார் மனைவி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிணக்காக மாறியுள்ளது. அன்று மதியம் இருவருமே சாப்பிடாமல் இருந்துள்ளனர்.

படம் பார்க்க செல்ல முடியாத ஏக்கமும், மனைவியுடனான சண்டையும் சேர்ந்து வினோத் குமாருக்கு வெறுப்பை ஏற்படுத்த, வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென தூக்கு மாட்டிக் கொண்டார் அவர். இதைப் பார்த்து பிரீதா கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டு சரவணம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில், "என் மகன் சரவணன் தீவிர ரஜினி ரசிகன். சின்ன வயசிலேருந்து எப்போதும் ரஜினி ரஜினி என்று கூறிக் கொண்டிருப்பான். ரஜினி ரசிகனாக இருந்ததாலோ என்னமோ எந்த கெட்ட பழக்கமும் அவனுக்கு இல்லை. அதனால் நாங்களும் அவனை விருப்பப்படி விட்டுவிட்டோம்.

இப்போது எந்திரன் படம் பார்த்துவிட்டு மற்றவர்கள் புகழ்ந்து கூறியதைக் கேட்டபோது, தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும், அதற்காக மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும் அவன் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். நல்லவேலை சீக்கிரம் காப்பாத்திட்டோம்" என்றார்.


செய்தி : தட்ஸ்தமிழ் இணையதளம் 


சிறுநீரால் சீறிப் பாயும் சூப்பர் பைக்: அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு!


பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உலகின் பெரும்பான்மையான நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்க, அடுத்த உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது எரிபொருளுக்காகவோ அல்லது தண்ணீருக்காகவோத்தான் இருக்கும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் பீதியை கிளப்பியுள்ளனர்

Saturday, October 9, 2010

எந்திரன் - எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம்

கலாநிதி மாறனை மொட்டை அடித்துள்ளார் ஷங்கர்

சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எந்திரன் படம் தயாரிக்கப்பட்டதாக அரசல் புரசலாகக் கதைகள் அடிபடும் நேரத்தில், இப் படம் தோல்வியடைந்தால் தான் இனி நடிக்கபோவது இல்லை என ரஜனி சிலரிடம் கூறியுள்ளாராம். ஆனால் லண்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் எந்திரன் படம் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இப் படத்தை பார்வையிடுகின்றனர். அது ஒரு புறம் இருக்க நாங்கள் கதைக்குச் செல்வோம்!


6 ல் இருந்து 60வரை, படையப்பா, சிவாஜி, பாட்ஷா, போன்ற பெருவெற்றி தந்த ரஜனியா இப் படத்தையும் நடித்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகிறது. 

3000ம் ஆண்டு வந்தால் கூட தயாரிக்க முடியாத ஒரு இயந்திர மனிதனைப் பற்றிய கதை இது. ஹாலிவுட் திரைப்படங்களான ஐ- ராபாட், மற்றும் டேர்மினேட்டர் ஆகிய 2 ஆங்கிலப் படங்களை ஒன்றாகக் கலந்து அதில் காதலைப் புகுத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் அவர்கள். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது பிரம்மாண்டத்தில் புரிகிறது. மொத்தத்தில் கலாநிதி மாறனை மொட்டை அடித்துள்ளார் ஷங்கர். கலைஞர் குடும்பத்தாரிடம் இருந்து காசடித்த முதல் ஆள் ஷங்கராகத்தான் இருக்கவேண்டும்.

டாக்டராக வசீகரன் என்னும் பெயரில் வரும் ரஜனி, சுமார் 10 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு தன்னைப்போல ஒரு ரோபோவை (இயந்திர மனிதனை) உருவாக்குகிறார். அதற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வருகிறது. தன்னை உருவாக்கிய எஜமான் ரஜனியின் காதலி என்று கூடப்பாரமல் அவரை அது தூக்கிச் செல்கிறது. பின்னர் ஐஸ்வர்யாவை ரஜனி மீட்டு அந்த ரோபோவை அழிக்கிறார் இது தான் கதை. ஐரோப்பிய நாடுகளில் மேற்கத்தைய கலாச்சாரத்தோடு ஒத்துவாழும் தமிழர்களுக்கே இப் படம் பாதியோடு அலுப்புத்தட்ட ஆரம்பமாகியது. திரையரங்கில் இடைவேளையோடு ஒரு முதியவர் எழுந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை நகரங்களில் இப் படம் ஓடினாலும், கிராமப்புறங்களில் அவ்வளவான வரவேற்ப்பை இப் படம் பெறப்போவது இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. அம்மா சென்டிமென்ட் அல்லது தங்கை அண்ணன் சென்டிமென்ட் வைத்து எடுத்தாலே நல்லா படம் ஓடாத இந்த காலகட்டத்தில் ஷங்கர் ஏன் இப்படி ஒரு படத்தில் இறங்கினார் என்றுகேட்டால், அது அவர் நீண்ட நாள் ஆசை என்கிறார்கள். அதற்கு ரஜனி பலிக்கடா. ஐஸ்வர்யா ராய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனவே நடித்துள்ளார். குறிப்பாக ரஜனி படத்தில் பல நகைச்சுவைகளையும், திரில்லிங்கையும், நல்ல சண்டைக்காட்சிகளையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் ஆனால் இதில் ஒன்றுமே இப் படத்தில் நேர்த்தியாக இல்லை.


ரஜனி தான் உருவாக்கிய ரோபோவை கண்டபடி கன்னா பின்னா என்று திட்டுகிறார். அதிகம் ஆங்கில வார்த்தைகள் உபயோகம், நடக்கவே முடியாத சம்பவங்கள் பலவற்றை சர்வசாதாரணமாக காட்டியுள்ளமை, என பல பிழைகள் இப்படத்தில் உள்ளன. பாடல் காட்சிகள் மிக அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளதோடு, உடைகளும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று ரோபோ வாயால் சொல்ல வைத்திருக்கிறார் ரஜினி.

பல வருடங்களுக்குப் பிறகு ரஜனி வில்லனாகவும் நடித்துள்ளார் இப் படத்தில். 

மொத்தத்தில் திரையரங்கு சென்று அதி கூடிய டிக்கட் விலைகொடுத்து பார்க்கும் அளவிற்கு எந்திரன் இல்லை என்றே சொல்லலாம். கொஞ்ச நாட்கள் பொறுத்தால் இதன் ஒரிஜினல் சீ.டி வெளியாகும் அதனை சாவகாசமாக வீட்டில் பார்வையிடலாமே எனத் தோன்றுகிறது.
Source: Adhirvu.com


Wednesday, October 6, 2010

ஆக்கம் கெட்ட கூவைகளும், அதன் தலைவனும்...

சமீபத்தில் வெளியான இந்திரன் திரைப்படம் வெளியான அன்று நடந்த கூத்துக்களை தான் கீழே உள்ள படங்களில் பார்க்கிறீர்கள். இப்படியெல்லாம் செய்வதினால் இவர்களுக்கு என்ன கிடைத்து விட போகிறது....லாபத்தில் பங்கா?