இதனைத் தடுக்கவே www.friendstosupport.org என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் சென்றால் இங்கு இரத்த வகை வாரியாக, தன்னார்வலர்களின் முகவரி கிடைக்கிறது. எந்த இடத்திற்கு இவர்கள் வர வேண்டும் எனக் குறிப்பிட்டால், உடனே அந்த இடத்திற்கு அருகே உள்ளவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நாம் நேரடியாகவே இரத்தக் கொடையாளிகளுடன் பேசி அவர்களை வரவழைக்கலாம்.
அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்கள் இயங்கவில்லை என்றால், உடனே இந்த தளத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்,. அவர்கள் சார்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு சரியான தொலைபேசி எண்களைப் பெற்று, தளத்தில் அப்டேட் செய்கின்றனர். இந்த தளத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு சேவை செய்திடலாமே!
No comments:
Post a Comment