அஜித், திரிஷா நடிக்க உள்ள மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். வருகிற நான்காம் தேதி முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக அந்த வீடு செட் வேலைகள் நடந்து வருகிறது.
இதன் நடுவே இந்தப் படத்திற்கு ஒரு பாடல் பதிவானதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால், திரை இசையில் வல்லவர்களான இளையராஜா, கவிஞர் வைரமுத்து இருவரையும் இணைக்க வேண்டும் என்று விரும்பிய இயக்குநர், அதை இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவிடம் கூறியிருக்கிறார். வைரமுத்து எழுதிய ஒரு பாடலை நீங்கள் பாட வேண்டும் என்று தந்தை இளையராஜாவிடம் யுவன் கூற, அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் இளையராஜா பாடியதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
எது எப்படியோ, கூட்டணி ஒன்னு சேர்ந்தால் மக்களுக்கு கொண்டாட்டம்தான்

No comments:
Post a Comment