ஜென்ம சாபல்யமா?
நாட்டில் எத்தனையோ குழந்தைகள் ஒரு வேளை சாப்பாட்டுக்கும், பசியாற தாய்ப்பால் கூட கிடைக்காத அனாதை குழந்தைகளும் பரிதவித்து கொண்டிருக்க . இவர்கள் என்னடாவென்றால் கட்அவுட்களுக்கு பால் ஊத்தி கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சில படித்த இளைஞர்களும் இவ்வாறான செயல்களை செய்கிறார்கள் என்பது தான் வேதனை.
தலைவா தலைவா என்று கூச்சல் போட்டு இவ்வாறான மதிகெட்ட செயல்களை செய்யும் இளைஞர் கூட்டத்தை, அந்த தலைவருக்கு "இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு கூட அறிவில்லையே என்பதை நினைக்கும் போது, இவர்களையெல்லாம் தலைவனாக நினைத்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களே இந்த முட்டாள் தமிழர்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது....
பாவம்.......இவங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு....
வேற என்னத்தை சொல்ல...
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மதி கெட்ட ஜென்மங்களை நினைத்து விட்டால்...












No comments:
Post a Comment