Sunday, October 10, 2010

சிறுநீரால் சீறிப் பாயும் சூப்பர் பைக்: அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு!


பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உலகின் பெரும்பான்மையான நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்க, அடுத்த உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது எரிபொருளுக்காகவோ அல்லது தண்ணீருக்காகவோத்தான் இருக்கும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் பீதியை கிளப்பியுள்ளனர்
இந்நிலையில்தான் இதற்கு தீர்வு காணும் விதமாக, அதாவது குறைந்த விலை எரிபொருள் அல்லது மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உலகின் பல நாடுகளிலும் படு தீவிரமாக இறங்கியுள்ளனர் விஞ்ஞானிகள். 

இந்நிலையில், எலெக்ட்ரிக் பைக்கை மனிதன் கழிக்கும் சிறுநீரிலேயே ஓட்டலாம் என்று கண்டுபிடித்து அசத்தியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த "சிக்னா" என்ற நிறுவனம்!  இந்த நிறுவனம் தயாரித்துள்ள 'சோடியம் சிலிசைட்' என்ற ஒருவித மண்துகள் போன்ற உலோக பவுடர்தான், பைக்கை ஒட்ட வைக்கும் இந்த மாயவித்தையை புரிகிறதாம். இந்த பவுடர் மீது தண்ணீர் பட்டவுடேனேயே, அதாவது தண்ணீர் இல்லாமல் சிறுநீர் பட்டாலும் - ஹைட்ரஜன் வாயு உருவாகி, அதனால் ஏற்படுகிற அழுத்தமும், நீராவியும் பைக்கை உந்தி தள்ளுகிறதாம்!

"எலெக்ட்ரிக் பைக்கிற்கு எரிபொருள் அறை (cell) இல்லாமல் இருப்பது ஏன்?" என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே வாகன விஞ்ஞானிகளை குடைந்துகொண்டிருக்கும் நிலையில், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள "சிக்னா" எரிபொருளுடன் கூடிய எலெக்ட்ரிக் பைக்கில், எரிபொருளுக்கான தனி 'செல்', அதாவது அறை (பெட்ரோல் டேங்க் போன்ற அளவில் சிறியவை) உள்ளதாம். 

இந்த "சிக்னா" எரிபொருள் கொண்ட பேட்டரி போன்ற 'கேட்ரிட்ஜை' (catridge) முற்றிலும் பயன்படுத்திவிட்டு, மீண்டும் ரீசார்ஜ் செய்யாமலேயே அந்த மாயாஜால பவுடரை மட்டும் நிரப்பி திரும்பவும் பயன்படுத்தலாமாம்.  சராசரியாக இந்த எரிபொருள் பவுடரின் எரிசக்தி திறன், ஒரு கிலோவுக்கு 1,000 வாட் (Watt) மணி வரை ஓடக்கூடியதாம். 

தற்போது புழக்கத்தில் உள்ள எலெக்ட்ரிக் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 20 மைல் ஆக இருக்க, இந்த புதிய எரிபொருளை உபயோகிக்கும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான வேகம் மணிக்கு 60 மைல் என்று கூறுகிறார் "சிக்னா" கெமிக்கல்ஸ் கம்பெனியின் அதிகாரி ஒருவர்! 

அண்மையில் லாஸ் வேகாஸில் நடைபெற்ற சர்வதேச இண்டர் பைக் ஏற்றுமதி வர்த்தக கண்காட்சியில், இந்த 'பைக்'கை சோதனை ஓட்டம் நடத்தி காண்பித்துள்ளது "சிக்னா" நிறுவனம். 


http://www.tutyonline.net/view/29_7785/20101007160029.html


No comments:

Post a Comment