தற்போது புழக்கத்தில் உள்ள 25 பைசாக்களை திருப்ப பெற, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இனிமேல் இது புழக்கத்தில் இருக்காது. தற்போது உள்ள 50 பைசா மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களின் வடிவங்கள் மாற்றப்படுகின்றன.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, ராஜ்யசபாவில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்கள் ஒன்று போல் இருப்பதால், பல்வேறு சிரமமங்களை சந்திக்க வேண்டியிருப்பதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, எதிர்காலத்தில், பைசாக்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அச்சிடும்போது, என்ன என்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்தும், தற்போதுள்ள சிரமங்களை குறைப்பது குறித்து ஆராய்வதற்காக உயர்மட்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி, இரண்டு ரூபாய் நாணயங்களை, ஒரு ரூபாய் நாணயம் வடிவில் தயாரிக்க ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 25 பைசாக்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின், தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசாக்கள், புதிதாக 25 பைசா சைசில் தயாரிக்கப்படும். ஒரு ரூபாய் நாணயங்கள், 50 பைசா சைசிற்கு மாற்றப்படும். இரண்டு ரூபாய் நாணயங்கள், ஒரு ரூபாய் நாணயம் இருந்த சைசில் மாற்றப்படும்.இவ்வாறு நமோ நாராயண் மீனா குறிப்பிட்டிருந்தார்.

No comments:
Post a Comment