Monday, November 8, 2010

விமானத்தில் ஏறும்போது முதியவர் இறங்கும்போது இளைஞர்: நம்பமுடியாத மேக்கப் மோசடி!


கனடாவின் வான்கூவர் நகருக்கு செல்லும் பயணிகள் விமானம் ஹாங்காங்கில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளின் டிக்கெட்கள், விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சோதனை செய்து அதிகாரிகள் அனுப்பினர். பையை தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் குடுகுடு கிழவர்
ஒருவர் நடந்து வந்தார். 


மெலிதான தேகம். முகம் நிறைய சுருக்கம். கண்கள் பஞ்சடைந்திருந்தன. அதிகாரிகள் உதவி செய்து விமானத்தில் ஏற்றிவிட்டனர்.விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் ஒரு பையை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்கு சென்றார். கால் மணி நேரத்துக்கு பிறகு அவரது சீட்டில் இளைஞன் ஒருவன் வந்து உட்கார்ந்தான். பக்கத்து சீட்காரருக்கு சந்தேகம். ‘கழிப்பறை அருகில் உள்ள சீட்டில் உட்கார்ந்திருக்கிறார். 

என்னை இங்கு உட்காரச் சொன்னார்’ என்றான் இளைஞன். வான்கூவரை வந்தடைந்தது விமானம். இதற்கிடையில், ‘யாரோ ஒருவர் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் போல தெரிகிறது. தீவிரமாக சோதனை செய்யவும்’ என்று ஹாங்காங்கில் இருந்து தகவல் வந்திருந்தது.எல்லாரிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஹாங்காங்கை சேர்ந்த 25 வயதுள்ள இளைஞன்தான் முகக்கசவம் அணிந்து கிழவராக நடித்திருக்கிறான் என்று தெரியவந்தது. 

55 வயதுள்ள ஒருவரின் போர்டிங் பாஸை வாங்கியிருக்கிறான். எல்லா சோதனைகளும் முடிந்த பிறகு, விமான நிலையத்திலேயே மேக்கப் போட்டுள்ளான். விமான பாத்ரூமில் கவசங்களை அகற்றிவிட்டு ‘யூத்’தாக மாறியுள்ளான் என்று தெரிவந்தது. அகதி அந்தஸ்து வேண்டி வந்ததை ஒப்புக்கொண்டான். 

அவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 29ம் தேதி நடந்த இந்த சம்பவம் விமான பாதுகாப்பில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதாக கனடா அதிகாரிகள் கூறினர்.



News Source : http://www.tutyonline.net/view/29_8579/20101108175958.html


No comments:

Post a Comment